மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பயிற்சி பெற்று போட்டித் தேர்வவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி


மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மத்திய மாநில அரசால் நடத்தப்படும் TNPSC, SSC போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக நூலகத்தின் 4 ஆம் தளத்தில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்களை கொண்டு செயல்பட்டு வரும் ஏராளமானோர் படித்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

 

இதனிடையே கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று TNPSC குரூப் 4 தேர்வில் 22 நபர்களும், SSC MTS தேர்வில் 2 நபர் என மொத்தம் மத்திய, மாநில அரசு பதவியில் வெற்றி பெற்றுள்ளார்கள். அதேபோல 16 கல்லூரி மாணாக்கர்களுக்கு VFX 3D Design தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு அதில் இரண்டு பேர் தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியில் சேர்ந்துள்ளனர். இதனிடையே TNPSC, SSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள், VFX டிசைன் தொழிற்கல்வி பயிற்சி பெற்றவர்கள் என மொத்தம் 39 பேருக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வழங்கினார்.

15 லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர்


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா,"கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 15 லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர். மதுரையின் அடையாளமாக இந்த நூலகம் இருந்து வருகிறது. சிறந்த வழிகாட்டுதலுடன் அடுத்த தலைமுறையினருக்காக செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றோம்" என்றார்