திருமங்கலம் தொகுதி திருமால் கிராமத்தில் உள்ள குவாரியின் அனுமதி ரத்து, மக்களுக்காக தான் திட்டம், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்ற போராட்டகளத்துக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது...,” மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் வேளாண் விளைநிலங்களை பாதிக்கும் வகையில், நீர் வழித்தடம் பாதிக்கும் வகையில், சுற்றுச்சூழல் மாசுபடும் வகையில் மக்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த வகையில் அழுத்தமான வெடிவைத்து பாறைகளை தகர்க்கும் குவாரிகளில் மூலம், குடியிருப்புகள் சேதாரம் அடைந்து மக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். தொடர்ந்து இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது இந்த ஆபத்தான அபாயகரமான சூழ்நிலை தடுத்து நிறுத்தி வேளாண் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .
பராசக்தி போல தாய்மார்கள் போராடி வந்தனர்
மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எடப்பாடியாரின் வழிகாட்டுதலின்படி மக்களின் போராட்டத்தில் நாங்கள் முன்னெடுத்து வந்தோம். திருமங்கலம் தொகுதியில் உள்ள பல பகுதிகளில் விவசாயிகள் போராடி வந்தனர், கனிம வளங்கள் அதிக அளவில் சுரண்டப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திருமால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தாய்மார்கள், விவசாயிகள் என போர்க்களத்துடன் போராடி வந்தனர். மன உறுதியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக இப்பகுதி போராடி நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இந்த போராட்டம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல புறநானூற்று தாய்மார்கள் போல, பராசக்தி போல தாய்மார்கள் போராடி வந்தனர் .
குவாரி உடைய அரசாணை ரத்து
மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் கனிவோடு பரிசீலனை செய்து, மாவட்ட வருவாய் அலுவலர், கனிமவளத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து காலையில் 6:00 மணிக்கு தொடங்கிய அறப்போராட்டம் இரவில் 12:00 மணி அளவில் மாபெரும் வெற்றி அடையும் வகையில் அந்த குவாரி உடைய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்று அடைந்ததுள்ளது. தொடர்ந்து மக்களுக்காக தொடர்ந்து நான் போராடுவேன்” என கூறியுள்ளார்.