மதுரை  மாநகராட்சி100 வார்டுகளை கொண்ட மாநகராட்சி. இதில் 20வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் மதி என்ற பில்டிங் கான்டிரக்டரிடம் வீடு கட்டும் ஒப்பந்தம் செய்து வீடு கட்டி வந்தார். இந்த பணியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியப்பட்டியை சேர்ந்த 4 தொழிலாளர்கள் இன்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த போது மாடிக்கு செல்வதற்கான படி கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டது.  அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி தவித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை துவக்கினர்.


 


அப்போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த மூக்காயி என்ற 52 வயது பெண் தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். மேலும் பணியில் ஈடுபட்டுவந்த நத்தம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த தொண்டிச்சாமி, கட்டையன் - 46, ஜோதி -52 ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து மூவரையும் உடனடியாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல் புதூர் காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் வீடு கட்டிட பணியின்போது தொழிலாளர் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.