உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை

விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களை சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ளது

Continues below advertisement

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஜூன் மாதம் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களை சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- வருகிற மே மாதம் 5, 6ஆம் தேதிகளில் நீதிபதிகள் டி.ராஜா, பரதசக்கரவர்த்தி ஆகியோர் அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் விசாரிக்கின்றனர். டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்தபின்பு கல்வி, சேவை, கனிமவளங்கள், தொழில்துறை, நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர் போன்ற துறை சம்பந்தப்பட்ட வழக்குகளை (வேறு பெஞ்சுக்கு ஒதுக்கப்படாத வழக்குகள்) நீதிபதி ராஜா விசாரிக்கிறார்.

Continues below advertisement

இதேபோல நீதிபதி பரதசக்கரவர்த்தி, வரி, சுங்கம் மற்றும் மத்திய கலால், சினிமா, மின்வாரியம், வனம் உள்ளிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அனைத்து கிரிமினல் வழக்குகளையும் விசாரிக்கிறார்.இதேபோல மே மாதம் 11, 12-ந்தேதிகளில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்கின்றனர். 

பின்னர் இந்த 2 நீதிபதிகளும் தனித்தனியாக முந்தைய நீதிபதிகள் விசாரித்த மனுக்களை விசாரிக்கின்றனர்.நீதிபதி தண்டபாணி, கிரிமினல் வழக்குகளை விசாரிக்கிறார்.மே மாதம் 18, 19-ந்தேதிகளில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்கின்றனர்.பின்னர் தனித்தனியாக வழக்குகளை விசாரிக்கின்றனர். நீதிபதி தமிழ்செல்வி, கிரிமினல் வழக்குகளை விசாரிக்கிறார்.மே மாதம் 25, 26-ந்தேதிகளில் நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்கின்றனர். தனி கோர்ட்டில் கிரிமினல் வழக்குகளை நீதிபதி வேல்முருகன் விசாரிக்கிறார்.

ஜூன் மாதம் 1, 2-ந்தேதிகளில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் தனி கோர்ட்டில் கிரிமினல் வழக்குகளை நீதிபதி தாரணி விசாரிக்கிறார்.நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையும் மற்ற வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணி வரையும் கோர்ட்டு அலுவலகங்கள் செயல்படும்.இவ்வாறு ஐகோர்ட்டு பதிவாளர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


திருத்தணி பா.ஜக வேல்யாத்திரை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய  5 நபர்களின் மீது பதியப்பட்ட வழக்கையும் ரத்து 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துஅமுதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பாரதிய ஜனதா கட்சிகள் உள்ளேன். திருத்தணி பா.ஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து 2020 நவம்பர் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் நான் உட்பட 5 நபர்கள் மீது சிவகங்கை டவுன் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.போராட்டத்தின்போது எந்த பொது சொத்தையும் சேதப் படுத்தவில்லை, நோய் பரப்பும் விதமாகவும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவகங்கை டவுன் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, திருத்தணி வேல் யாத்திரை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மனுதாரர் உட்பட 5 நபர்களின் மீது பதியப்பட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Continues below advertisement