மதுரை புத்தகத் திருவிழா 2025
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக 05.09.2025 முதல் 15.09.2025 வரையில் நடைபெறும் புத்தகத் திருவிழா – 2025-ல் நாள்தோறும் பங்கேற்கவுள்ள பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் விபரம் குறித்த மதுரை மாவட்ட ஆட்சிதலைவர் கே.ஜே.பிரவீன் குமார், அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள்
மதுரை மாவட்ட ஆட்சியரின் பதிவில்..,” புத்தகத் திருவிழாவில் 232-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ”சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத்திருவிழாவில் தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பட்டியல் விபரம்.
* 10.09.2025 புதன்கிழமை 1. மரபின் மைந்தன் முத்தையா -“ஏட்டு வழிச்சாலை”
2. மதுரை ராமகிருஷ்ணன் -“மெய்ப்பொருள் காண்பது அறிவு”
* 11.09.2025 வியாழக்கிழமை 1.மதுக்கூர் ராமலிங்கம் - “செப்புவது உடையேன்”
2.இலட்சுமணப்பெருமாள் - “வாசிப்பது போற்றுதும்”
* 12.09.2025 வெள்ளிக்கிழமை 1. வெங்கடேசன் MP - “மாண்புடைய மரபின் மதுரை”
2. சுகி சிவம் - “தமிழர் வாழ்வியல்”
* 13.09.2025 சனிக்கிழமை 1.கனிமொழி கருணாநிதி MP - “தெற்கின் எழுச்சி”
* 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை - ஞானசம்பந்தன் குழுவின் பட்டிமன்றம “திரையிசைப் பாடல்கள்” இலக்கியம் ஆகுமா? ஆகாதா?
* 15.09.2025 திங்கட்கிழமை புலவர் ராமலிங்கம் - “சிரிப்போம், சிந்திப்போம்”
பாஸ்கர் சக்தி - “கற்றது கற்பனை”
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சிதலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்