வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி , திமிங்கலம் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் திமிங்கலத்தின் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரிஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பதே குற்றமா?  அம்பர் கிரிஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என்பது குறித்து வனத்துறையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



 

திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் வைத்திருந்ததாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த  தர்மராஜ் என்பவர்  ஸ்ரீவில்லிபுத்தூர்  வனத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "இது போன்ற வழக்குகளில்  ஜாமின் வழங்கப்பட்டு உள்ளதால்,  மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.

 





அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ன் படி, அரிய உயிரினமான   திமிங்கலம் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் திமிங்கலத்தின் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரிஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பதே குற்றமா அம்பர் கிரிஸ் வைத்திருப்பதது சட்டபடி குற்றமா? என்பது குறித்து வனத்துறையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 26 ம்  தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண