மதுரை  மாவட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் மானியத்தில் கடனுதவி பெற்று அமைக்கப்பட்ட தேனீ வளர்ப்பு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 
மாமதுரை “இயற்கை மதுரை
 
மதுரை மாவட்டம், பொய்கைகரைப் பட்டியில் மதுரை  மாவட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் மானியத்தில் கடனுதவி பெற்று அமைக்கப்பட்ட தேனீ வளர்ப்பு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்...,” பொதுமக்களிடையே இயற்கை உணவுப் பொருட்கள், பாரம்பரிய விவசாயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சியினை மதுரை மாவட்ட நிர்வாகம் எடுத்து, அதன் தொடர்ச்சியாக “மாமதுரை “இயற்கை மதுரை” என்ற கருப்பொருள் அடிப்படையில் இயற்கை பஜார் கண்காட்சி மற்றும் விற்பனை மதுரை தமுக்கம் மைதானத்தில் இரண்டு நாட்கள் 200 அரங்குகள் அமைத்து நடத்தப்பட்டது. இக்கண்காட்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இயற்கை பஜார் அரங்கத்தில் ஜோஸ்பின் அவர்கள் தங்களது நிறுவன தேன் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தினார். ஒரு ஆண்டிற்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் தேன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் செய்து வருகிறார். ஜோஸ்பின் அவர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.  விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று அரசு திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கர் சாம்பியன்ஸ் திட்டம் மூலம் ரூபாய் 1 கோடிக்கும் மேல் மானிய விலையில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மானிய விலையில் கடன் உதவி பெற்று புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
 
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி ஜோஸ்பின் தெரிவிக்கையில்,...”
 
என்னுடைய பெயர் ஜோஸ்பின். நான் மதுரையில் பொய்கைகரைப் பட்டியில் தேனி வளர்ப்பு பண்ணை வைத்திருக்கிறேன். 2006 ஆம் ஆண்டில் பத்து பெட்டியில் தேனி வளர்ப்பு ஆரம்பித்து இப்பொழுது பத்தாயிரம் பெட்டிகளில் பெரிய அளவில் தேனீ வளர்ப்பு செய்து வருகிறேன். 50 வகையில் தேன்களை ஐந்து ரூபாய் பாக்கெட்டுகளில் சின்ன கிராமங்களுக்கு விற்பனை செய்கிறோம். தேன் கலந்த ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள எல்லா மக்களும் தேனை சுவைக்க வேண்டும் என்பதை என்னுடைய ஆசை.  2010 ஆம் ஆண்டு மானியத்தில் 10 இலட்சம் கடன் உதவி பெற்று இத்தொழிலை துவக்கினோம். தற்போது வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் தேனீ வளர்ப்பு மையம் மற்றும் அதன் மதிப்புக்கூட்டு மையத்தினை ஆரம்பித்துள்ளேன். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அக்டோபர் மாதத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் இயற்கை சந்தையில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த அமைக்கப்பட்டிருந்த அரங்கில் எங்கள் நிறுவனத்திற்கு அரங்கு வழங்கி எங்கள் நிறுவனத்தின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. சிறிய விவசாயிகளாகிய எங்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மேலும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை என அனைத்து துறைகளும் மிகவும் உதவியாக இருந்து விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார்கள். நானும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வழிகாட்டும் பயிற்சி நடத்தி சுமார் 8,000 தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளேன். எனவே விவசாயிகள் அனைவரும் தமிழ்நாடு அரசு வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி பொருளாதாரத்தில் மேம்பட்டு பயன்பெற வேண்டும்.  உன்னதமான திட்டத்தை உருவாக்கி தந்த முதல்வருக்கு எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.