மதுரை ரயில்வே திட்டங்களைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கு இரண்டு மிக முக்கியமான விஷயங்கள் தேவை. கூடல் நகரை இரண்டாவது முனையமாக மாற்றுவது, சரக்கு வாகனங்களுக்கான பைபாஸ் சாலையை உருவாக்குவது என எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை எம்.பி செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் கூறுகையில் "மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் இரண்டாவது ரயில் நிலையம் மாற்றுவதாக ஒருங்கிணைந்த ஏற்பாடுகள் என்பது தேவை என்பதை வலியுறுத்தினோம். இன்றைய கூட்டத்தில் மிக முக்கியமாக கூடல் நகர் ரயில் நிலையத்திற்காக குறிப்பாக பயணிகள் வந்து செல்வதற்கான வசதிகள் சொல்வதில் மூன்று துறையின் உடைய ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. ரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மதுரை மாநகராட்சி அதற்கான இரண்டு கூட்டங்கள் நடத்தி தற்போது அதை முறைப்படுத்தி இருக்கின்றோம். நெடுஞ்சாலை துறையிடம் தொடர்ந்து பேசி இருக்கின்றோம், வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் மேம்பாலத்தினுடைய இரண்டு பக்கமும் நான்கு பக்கமும் இருக்கின்றது.
மதுரை வளர்ச்சிக்கு இரண்டு மிக முக்கியமான விஷயங்கள்
மேம்படுத்தி புதிதாக அமைத்து தர வேண்டிய பொறுப்பு நெடுஞ்சாலை துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். டிசம்பர் இறுதிக்குள் கூடல் நகர் ரயில் நிலையத்திற்கான இணைப்புச் சாலைகளை விரிவாக்கி மின் விளக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். 5 ரயில்கள் இங்கே நிறுத்தப்படுகிறது. இது வரக்கூடிய காலங்களில் அதிகப்படுத்தப்படும், பகலில் வரக்கூடிய ரயில்களின் நிறுத்த வேண்டும் என்பது குறித்து ரயில்வே வாரியத்திற்கு தெரிவித்திருக்கின்றோம். ஏறக்குறைய ஆறு ரயில்களின் 12 நிறுத்தத்திற்கு தொடர்ந்து முயற்சிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியின் துறைமுகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, மதுரை ரயில்வே திட்டங்களைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கு இரண்டு மிக முக்கியமான விஷயங்கள் தேவை. கூடல் நகரை இரண்டாவது முனையமாக மாற்றுவது, சரக்கு வாகனங்களுக்கான பைபாஸ் சாலையை உருவாக்குவது. அனுமதி பெறுவதற்கு முன்னதாகவே டிசம்பருக்குள் இந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது குறித்த திட்டமிடுதல் செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.