மதுரையில் உணவகத்தில் காரை ஏற்றி கொலை முயற்சி செய்த வழக்கில் வழக்கறிஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
உணவகத்தின் மீது கல் வீசி தாக்குதல்
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கௌரி கிருஷ்ணா உணவகத்தில், கடந்த 2016 ஏப்ரல் 23 ஆம் தேதியன்று மதுரை SSகாலனி அருள்நகரை சேர்ந்த வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் இடப் பிரச்னையின் காரணமாக
உணவகத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார். தொடர்ந்து தனது காரை கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்து உணவகத்தின் முன்புறமுள்ள கண்ணாடியை உடைத்து, ஓட்டலுக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தினார்.
கொலை வழக்கு பதிவு
இதில் உணவத்தில் பணியாற்றிய 1. மஞ்சு பாரதி 2. முத்து லெட்சுமி 3. மீனா மற்றும் சுப்புராம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் கார்மேகம் மற்றும் அவரது மனைவி நாகமணி மற்றும் உள்ளிட்ட சிலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்
மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது
இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கானது இறுதிகட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் கார்மேகத்திற்கு கொலை முயற்சி பிரிவில் 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சொத்தை சேதப்படுத்திய வழக்கில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் என ஏக காலத்துக்கு அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் இருந்து நாகமணி மற்றும் முத்துப் பிள்ளை ஆகிய இருவரையும் விடுவித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் கார்மேகத்தை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துசென்று சிறையில் அடைத்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் உணவகத்திற்குள் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது. வழக்கில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில் வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.