மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை - கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்
தமிழகத்தில் பெருநகரமான சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக மதுரையில் திருமங்கலத்தில் இருந்து, மதுரை மாநகர் வழியாக ஒத்தைக்கடைக்கு 31.93 கிலோ மீட்டர் தூரத்திற்கும். கோவையில் அவனிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை; உக்கடத்திலிருந்து - சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவி வரை, 39 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ திட்டமானது தீர்மானிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என நம்பப்பட்டது
முக்கியம் வாய்ந்த மதுரை மற்றும் கோவை என இரண்டு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை, 10 மாதங்களுக்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. இந்த ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என நம்பப்பட்டது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஆய்வு பணி நடைபெற்று வந்தன. இந்த சூழலில் நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழக அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மக்கள் தொகை கணக்கீட்டின் படி 20 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நகர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் ஏற்புடையது. கடைசியாக நடைபெற்ற மக்கள் தொகை கணக்கீட்டின் படி கோவையில் மக்கள் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சம் தான் என்பதால் இந்த இந்த இரண்டு நகருக்கு மெட்ரோ திட்டத்திற்கு பொருந்தாது என திருப்பு அனுப்பியுள்ளது. இது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அதிர்த்தியினை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதுரை,கோவை மெட்ரோ விரிவான திட்ட அறிக்கை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து - மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்