மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் நிர்மல் பிரபு (வயது 26 ) என்ற வாலிபர் உடமையை சோதிக்கும் போது ஏர்கன் எனப்படும் பொம்மை துப்பாக்கியை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மத்திய தொழில் காப்பு படை வீரர்கள் மற்றும் அவனியாபுரம் காவல் போலீசார் அவரிடம் விசாரணை செய்து வந்தனர்
தவறுதலாக பயண அவசரத்தில் கொண்டு வந்ததாக நிர்மல் பிரபு கூறியதை அடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்து பின்னர் விடுதலை செய்தனர். விமான நிலையத்திற்குள் திடீரென ஏர்கன் துப்பாக்கியுடன் மதுரை விமான நிலையத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் சோதனையில் சிக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மதுரையின் மற்ற செய்திகள்
மதுரை ஆவினில் பால் விநியோகத்தில் மீண்டும் தாமதம்
மதுரை மத்திய பால் பண்ணையில் இருந்து பால் முகவர்களுக்கு விநியோகம் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருவதால் பால் முகவர்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாலை 4.00மணிக்குள் பால் முகவர்களுக்கு வரவேண்டிய ஆவின் பால் காலை 7.00 மணி கடந்து விநியோகம் செய்யப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.
இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடிக்கு வந்த கடிதம் குறித்த கேள்விக்கு, எல்லாம் நன்மைக்கே என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்.
சென்னையில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அவரை அதிமுகவினர் ஏராளமானோர் உற்சாகத்தோடு வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்
அம்மா மறைந்திட்ட இந்நன்னாளில் என எடப்பாடி அணியினர் உறுதிமொழி எடுத்தது குறித்த கேள்விக்கு,
டங்க் ஸ்லிப். வாய்தவறி தவறுதலாக கூறிவிட்டனர்.
டெல்லியில் இருந்து இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு கடிதம் வந்தது குறித்த கேள்விக்கு,
எல்லாம் நன்மைக்கே.
பொதுக்கூட்டம் எப்போது நடைபெறும் குறித்த கேள்விக்கு,
விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கூறினார்.