மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதி குன்னத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜன். கிராமத்தின் வளர்சிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து செயல்படுத்தியுள்ளார். அதே போல் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து சமூக பணிகளில் முன்னெடுத்து வந்ததார். இதன் காரணமாக குன்னத்தூர் கிராமத்தின் ஊராட்சிமன்ற தலைவராக கிராம மக்கள் தேர்வு செய்தனர், இந்நிலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணராஜ் மற்றும் உதவியாளர் முனியசாமி இருவரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வரிச்சூரை சேர்ந்த செந்தில் மற்றும் பாலகுரு இருவரும் கைது செய்யபட்டனர். இந்நிலையில் கிருஷ்ணராஜ் கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுபெற உள்ள நிலையில் குன்னத்தூர் கிராமத்திற்கு ஊரக உள்ளாட்சிக்கான இடைத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு கிருஷ்ணராஜனின் மனைவி ரா.சித்ரா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ஊராட்சிமன்ற தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்படவுள்ளார். கிராமத்தின் நலனுக்காக போராடிவந்த பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வந்த தனது கணவர் கொலை செய்யப்பட்ட நிலையிலும் அவரின் மனைவி சித்ரா கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிட்டாலும் அக்கிராம மக்களும் சித்ராவிற்கு முழுமையாக வரவேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பாண்டியன், பல்லவன், வைகை சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள்!
கிராம முன்னேற்றத்திற்காக தனது கணவரின் இழப்பையும் தவிர்த்து மக்களின் நலனுக்காக பாடுபட காத்திருக்கும் கிருஷ்ணராஜின் மனைவி 12 ஆம் வகுப்பு பள்ளி முடித்த நிலையில் மாநகர் பகுதியில் வசித்துவந்தார். தற்போது மீண்டும் குன்னத்தூருக்கு சென்று அங்கயே தங்கி கிராம வளர்ச்சிக்கு பாடுபட போகிறார் என்பது கிராமத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !