எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை உள்ளிட்டோர் அந்த இடத்திலிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர்

 

அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்

 

அ.தி.மு.க.,வின் கிளை, வார்டு, வட்டகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு ஒன்றை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  நியமித்தார்.  இந்தக் குழுவில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ,செம்மலை, அ.அருணாச்சலம், பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அதிமுக நிர்வாகிகள் முன் ஏற்படும் பிரச்னை

 

இதையடுத்து கடந்த 11-ஆம் தேதி நியமிக்கப்பட்ட குழு சார்பாக, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் களஆய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை, கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல் வெடித்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற பிரச்னையால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று (நேற்று) மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரையில் உள்ள மத்திய தொகுதி, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு என நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுது. இந்நிலையில் மதுரையில் இன்று (நேற்று) காலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடியானது. இந்நிலையில் மாலை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்திலும் மீண்டும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 


தேர்தலோ, போராட்டமா வந்துவிட்டால் அதிமுக காரன் ஒன்று சேருவார்கள் என்று கூறியிருந்தார். 



 

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அதிமுக  மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கள ஆய்வு கூடம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது திருப்பரங்குன்றம் தொகுதி கள வேலையில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குறிப்பிடுகையில் கருத்துக்களை சில நேரங்களில் நாங்க கோபமாக பரிமாறிக் கொள்வோம். எம்ஜிஆர் காலத்தில், அம்மா காலத்தில் இந்த கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஆனால் தேர்தலோ, போராட்டமா வந்துவிட்டால் அதிமுக காரன் ஒன்று சேருவார்கள் என்று கூறியிருந்தார். 

 

திருப்பரங்குன்றத்திலும் தள்ளு முள்ளு

 

கள ஆய்வு கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில் இறுதியாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலையுடன் அதிமுக திருப்பரங்குன்றம் மேலூர் தொகுதி நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது மேலூர் தொகுதியை சேர்ந்தவர்களை புகைப்படம் எடுக்க விடாமல் திருப்பரங்குன்றம் தொகுதியினர் தடுத்ததாகவும், இதனால் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை உள்ளிட்டோர் அந்த இடத்திலிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர். அதிமுக கள ஆய்வில் ஏற்கனவே சில இடங்களில் அடிதடி மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் திருப்பரங்குன்றத்திலும் அதேபோல் நடைபெற்றது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.