அதிமுக இயக்கத்திற்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடியார்


 


அ.தி.மு.க., அம்மா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவுடு, பொடியாக்கி, அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறுவடிவமாக உள்ளார். அதனால்தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து உள்ளார்கள். இன்றைக்கு திமுக மக்களாட்சி மகத்துவத்தை மறந்து, மன்னர் ஆட்சியை வேறூண்றிட செய்கிறது. இன்றைக்கு தி.மு.கவிற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

 

கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம்



 

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆசியோடு அவர் எடுத்த முயற்சிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார். அ.தி.மு.க., என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று சொன்னாலே அது எல்லோருடைய கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு சிதறிய தேங்காய்வாய் சிதறிய இயக்கம், அம்மாவின் முயற்சியாலே அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம் தலை நிமிர்ந்து நிற்பகிறது அதேபோலத்தான் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு எடப்பாடியார் சிறப்பாக இயக்கத்தை நடத்தினார். 52 ஆண்டுகளிலே 32 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்து பல்வேறு சாதனை திட்டங்களை படைத்தது, அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் நான்கு நாள் நிற்குமா? என்று வீர வசனம் பேசினார்கள் அதை எல்லாம் விவேகத்துடன் செயல்பட்டு நான்காண்டுகள் மூன்று மாதம் முழு முழு ஆயுதையும் சிறப்பாக செய்தவர் எடப்பாடி பழனிசாமி.

 



எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது



 


இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம் தொண்டர்கள் மன வலிமையுடன் அதை எதிர்கொள்ள வேண்டும். இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அதிமுகவிற்கு எந்த சேதாரம்  இல்லை, இது மக்களால் பாதுகாக்கப்படுகிற இயக்கம். மக்கள் சக்தி பெற்றிருக்கிற மகத்தான இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது எனபேசியுள்ளார். 

 

பரபரப்பாகும் அதிமுக


 

சமீபத்தில் செங்கோட்டையன் பேசிய விவகாரம், வருத்தத்தை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பின் விளக்கங்களும் சப்பைக்கட்டுதான் என்பது, அரசியல் அறிந்தோருக்கு நன்றாகவே தெரியும். அதனால், அதிமுகவில் இதன் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை அனைவரும் உற்று நோக்கியுள்ளனர். அடுத்த வருடம் தேர்தல் வேறு வருவதால், அதற்குள் கட்சி பிளவுபட்டால், அது அதிமுகவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இத்தகைய சூழலால் தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த நிலையில் உள்ள ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளது, அதிமுகவில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.