இன்னும் 4 மாதம் தான் உள்ளது, இந்த நான்கு மாதத்தில் முதலமைச்சர் என்ன செய்ய முடியும் என்று தான் கேள்வி எழும்புகிறது? இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
ஆர்.பி.உதயகுமார்
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது..,” தமிழ்நாடு இன்றைக்கு வளர்ச்சி அடைந்து வருவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு பெருமை தேடிக் கொள்ளும் வகையில் பேசுகிறார். குறிப்பாக தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன் என்று தொடர்ந்து அறிக்கை விடுகிறார். பொதுவாக குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்தால் தான், நாடு உண்மையான  முன்னேற்றம் அடையும் என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒன்றும் அறியாது அல்ல? தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் முந்திய ஆண்டை காட்டிலும், தற்போது அதிகரித்து இருப்பது தமிழ்நாடு மக்களுக்கு கவலையாக உள்ளது. 
 
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள்
 
தமிழ்நாட்டில் மட்டும் 365 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எடுத்துக்கொண்டால் கடந்த 2022 ஆம் ஆண்டு 6,580 குற்றங்கள் நடைபெற்றது. தற்போது 2023 ஆம் ஆண்டு 6,928 அதிகரித்து உள்ளது, என்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. சென்னை நகரில் மட்டும் குழந்தைக்கு எதிரான குற்றங்கள் 514 இல் இருந்து தற்போது 523 அதிகரித்துவிட்டது. பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் 1921 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 9.1 சதவீதம் அதிகரித்து இருந்தது. 2021 ஆண்டின் முந்தைய ஆண்டிலிருந்து  2023 ஆண்டை கணக்கீட்டை எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ 68 சதவீதம் அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், இணைவழி குற்றங்கள், விபத்து என்ற அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து தான் வருகிறது
 
தமிழகத்தில் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை தடுக்க உறுதியாக நடவடிக்கை முதலமைச்சர் எடுக்க வில்லை. திமுக அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் தமிழகம் போராடும் என்று மக்களை திசை திருப்பும் வகையில் தான்  ஸ்டாலின் அரசு அக்கறை செலுத்துகிறது தவிர சட்ட ஒழுங்கில் தீர்வு காண எந்தவிதமான கவனமும் அரசு செலுத்தவில்லை. எடப்பாடியார் சட்டமன்றத்தில் 2‌.50 மணி நேரம் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் சம்பவம் குறித்து தொடர்ந்து பேசினார். அப்போது முதலமைச்சர் இதை  எல்லாம் கூர்ந்து கவனித்தார், ஆனால் அதற்கு தீர்வு காண அக்கறை செலுத்தவில்லை அதற்கு பின்பு தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து தான் வருகிறது. 
 
ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வர வேண்டும்
 
 இன்றைக்கு தேசிய குற்ற ஆவண காப்பகம்  இந்த அரசின் கையாளத்தனம், அக்கறை இல்லாது, நிர்வாக சீர்கேடு, குளறுபடி என்பதை காட்டியுள்ளது எடப்பாடியார் எடுத்து வைத்த வாதங்களை வலுமை சேர்க்கும் முகமாக ஆதாரத்துடன் இன்றைக்கு அறிக்கையாக வெளிவந்துள்ளது. இன்னும் 4 மாதம் தான் உள்ளது, இந்த நான்கு மாதத்தில் முதலமைச்சர் என்ன செய்ய முடியும் என்று தான் கேள்வி எழும்புகிறது? இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வர வேண்டும்” எனவும் தெரிவித்தார்.