”திருமங்கலம் தொகுதியில் எடப்பாடியார் எழுச்சி பயணப் பயணம் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இரண்டாம் சித்திரைத் திருவிழா அமையும் - என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி.

ஈ.பி.எஸ்., 10 தொகுதிகளில் எழச்சி பயணத்தை மேற்கொள்கிறார்
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது..,” எடப்பாடியார் கடந்த 7.7.2025 அன்று எழுச்சி பயணத்தை மேற்கொண்டு, இதுவரை 118 தொகுதிகளில் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளார். 6728 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக பேருந்து மூலம் மக்களை சந்தித்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைத்து தர மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து  அதை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து நான்காம் கட்ட எழுச்சி பயணமாக இன்று  ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை மதுரை மாவட்டத்தில 10 தொகுதிகளில் எழச்சி பயணத்தை மேற்கொள்கிறார்.
 
திருப்பரங்குன்றம் - திருமங்கலம் பகுதியில் உரை
 
இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில்  ஒவ்வொரு கிராமங்களில் வீடு, வீடாக சென்று வாக்காள பெருமக்களுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுக்கப்படும். இன்று சென்னையில் இருந்து காலை மதுரைக்கு விமானம் மூலம் வருகிறார். மாலை 4 மணிக்கு அறுபடை வீட்டின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் எழுச்சி பயணத்தை  முடித்துக்கொண்டு  மாலை 6 மணிக்கு திருமங்கலத்தில் உள்ள அம்மா கோயிலில்  எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார். 
 
எல்.இ.டி. திரையரங்கம்
 
கப்பலூர் டோல்கேட்டில் இருந்து திருமங்கலம் அம்மா கோயில் வரை பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கிறார்கள். பெண்கள் பூரண கும்பம் வைத்தும் , முளைப்பாரி ஏந்தியும் வரவேற்பு அளிக்கிறார்கள், அதேபோல இளைஞர்கள், விவசாயிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். குறிப்பாக கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றுகின்ற வகையில் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சியுடன் எடப்பாடியாருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது‌. அதனை தொடர்ந்து பல்வேறு  திருக்கோயிலில் இருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நிகழ்ச்சியை பார்க்கின்ற வகையில் அகன்ற எல்.இ.டி. திரையரங்கம் மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
 
வரலாற்று திருப்புமுனை ஏற்படுத்தும்
 
இந்த கூட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக, இன்றைக்கு திமுக ஆட்சி அவலங்களையும், அதிமுக  அரசு செய்த சாதனைகளை விளக்கியும், மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார். அப்போது மக்களுக்கு செய்ய வேண்டிய தேர்தல் அறிக்கையும் கூறிவருகிறார்.
மதுரை என்றாலே சித்திரைத் திருவிழா அந்த சித்திரைத் திருவிழா, ஆண்டிற்கு ஒருமுறை வரும் ‌ஆனால் நாளை திருமங்கலத்தில் நடைபெறும் எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு,  மதுரையின் இரண்டாம்  சித்திரை திருவிழா என்பது போல் அமையும். 2026 ஆண்டில் எடப்பாடியார் முதலமைச்சர் வரவேண்டும் என்ற லட்சிய முழக்கத்தோடு லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த எழச்சி பயணம் வரலாற்று திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் அமையும்” என கூறினார்.