திருமணத்திற்கு வந்தவருக்கு அடித்த ஜாக்பாட் - இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்..!
மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு 70 ஆயிரம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்.

விக்னேஷ்சிவன் – நயன்தாரா காதல் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இன்று முழுக்க இது தான் ஹாட் டாப்பிக். இந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா. இவர் நீண்ட நாட்களாக விக்னேஷ்சிவனை காதலித்து வந்தார். இந்த நிலையில், விக்னேஷ்சிவன் – நயன்தாரா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர். இப்படி வெட்டிங் ஒருபக்கம் இருக்க, மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு 70 ஆயிரம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் மணமக்கள்.

Just In
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் - ஜோதி பிரியா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.