1. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்த சின்னழகன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சாத்தாம்பாடி வி.ஏ.ஒ தங்கவேல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது. லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழப்புதுறை போலீசார் அதிரடி நடவடிக்கை.

2.நெல்லையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

 



3. ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இந்த நிலையில் கச்சத்தீவு, நெடுந்தீவு,  தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கற்களைக் கொண்டு தாக்கியதில் 2 படகின் கண்ணாடி  முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் விரட்டி அடித்து வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர்  அட்டூழியத்தை ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளனர்.

4.திண்டுக்கல் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலா தேவி நேற்று கொலை செய்யபட்ட வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

5.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ரூ.2 கோடி இயந்திரங்கள் திருட்டு வழக்கில் ஐ.என்.டி.யு.சி மாநில நிர்வாகியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.

 


6.திண்டுக்கல்   முத்தனம்பட்டி அருகே  2வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு.

7.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் அடுத் தடுத்து 8 கொலைகள் நடந்தன. இதையடுத்து மாவட்ட எஸ்.பி செந்தில் குமார் உத்தரவில் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் 22 ரவுடிகளை கைது செய்த நிலையில், நேற்று மேலும் 37 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்படும் என எஸ்.பி தெரிவித்தார்.

8. சிவகங்கை மாவட்ட தேவகோட்டை அருகே அரச மரத்தடி பிள்ளையார் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னையில் ஆறாவயல் காவல் நிலையத்தில் எஸ்.ஐ முன்னிலையில்இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.

9.சிவகங்கை அருகே ஒய்ய வந்தானில் நாகராஜன் என்பவரது தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் நிலக்கடலை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதரில் இருந்து வெளியே வந்த கதம்ப வண்டுகள் இவர்களை கொட்டின. இதில் தாளையம்மாள், நீலாவதி, முத்தாலம்மாள், செல்லம்மாள், கிருஷ்ணவேனி, மணி மேகலை, பூங்கோதை, அமுதா, காளியம்மை, இருளாயி உட்பட 11 பெண்கள் காயமடைந்தனர். இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்படுகிறது. இது குறித்து காளையார் கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 



10.மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 33 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74417-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 13 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73008 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல்.  இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1163 இருக்கிறது. இந்நிலையில் 246 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ஆகிய இடங்களில் விசாரித்தோம்.