திண்டுக்கல்  மாவட்டம்  தற்போது  கொலை நகரமாக மாறி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் கொலைகள் நடந்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை முயற்சி , கொலைகளும் நடந்து கொண்டே வருகிறது. கடந்த 13ஆம் தேதி இரவு இரு இளைஞர்கள் நாகல் நகர் பகுதியில் ஒருவரை கொலை செய்யும் முயற்சியுடன் கத்தியால் கொடூரமாக குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.




திண்டுக்கல் நகர மையப்பகுதியில் உள்ள தங்கம் லாட்ஜ் அருகே இருவர் பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட நிலையில், அடுத்த  நாளே திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டி பகுதியில் இப்ராகிம் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவரை வெட்டி ரயில் முன் வீசிய நிலையில், நேற்று காலை முன்பகை காரணமாக நிர்மலா என்பவரின் தலையை வெட்டி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று தலையை வீசிச் சென்ற  சம்பவம் நடந்துள்ளது.



அதனை தொடர்ந்து நேற்று மாலையே திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்டீபன்ராஜ் அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தலையை அங்கே வைத்து விட்டு மட்டப்பாறை அருகே உடலை வீசி சென்று உள்ளனர்.  மேலும் கொலை செய்யப்பட்டவர் மீது கொடைக்கானல், திண்டுக்கல் நகர் வடக்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது எனினும் முன்பகை காரணமாக தான் கொலை நடந்ததா ?அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 




தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொலைகள் நடந்து வருவதால், திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் தற்போது அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


திண்டுக்கல் மாவட்டத்தில் , தொடர்ந்து கொலை , கொள்ளை , கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .


’’கடந்த 5 நாட்களில் திண்டுக்கல்லில் 3 கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளதால் பரபரப்பு’’