1. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய திண்டுக்கல் நந்தவன பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் தலை துண்டித்து கொடூர கொலை  செய்யப்பட்டார். கொலை செய்து தலையை மட்டும் எடுத்துச் சென்ற கொலையாளிகள் பசுபதி பாண்டியன் வீட்டில் வைத்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.

 


2.  கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மூட்டை மூட்டையாக கொண்டு வந்த 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுரை கள்ளிக்குடி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரண்டு சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த கார்களில் 2000,500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு 3 பைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



3.சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழந்தார். முறையாக சிகிச்சையளிக்காத மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

4. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் கல்லூரி மாணவர்கள் சுமார் 49 பேர் இணைந்து 21 ஆயிரம் தீப்பெட்டிகளை கொண்டு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் உருவப்படம் மற்றும் அவரது பொன்மொழிகளை உருவாக்கி சோழன் விருது  சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.



5.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பா.ஜ.க நிர்வாகி கொலை வழக்கில் இருவரை தேடி வந்த நிலையில், மேலகாவனவயல் பட்டியைச் சேர்ந்தசொக்கலிங்கம் மகன் பெரியசாமி வயது( 30)   முருகன் மகன்வீரபாண்டி வயது (25) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6. ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தில்  ஏஜெண்டாக செயல்பட்ட  வெங்கடேச சாஸ்திரிகள் என்பவருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.



7.நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிலாத்திகுளத்தில் வீட்டின் சுவர் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆகாஷ் (வயது 2) என்ற சிறுவனுக்கு வலது கை துண்டாகி சம்பவ இடத்தில் பலியானர். சீலாத்திகுளம் அருகிலுள்ள  கல்குவாரியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட போது ஏற்பட்ட அதிர்வினால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.



9. மகாத்மா காந்தி 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மதுரைக்கு ரயில் மூலம் வந்தார். அதுபற்றி அறிவிப்பு பலகை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் அந்த இடம் "காந்தி கார்னர்" என்று அழைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வீடியோ படங்கள் 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடல் பின்னணியில் ஒளிபரப்பப்படுகிறது. காந்தியடிகள் மதுரைக்கு ரயிலில் வந்த நூற்றாண்டு தினத்தை நினைவு படுத்தும் வகையில்  அவரது திருவுருவப் படத்திற்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, நிலைய இயக்குனர் டி.எல். கணேஷ், கோட்ட சுற்றுச்சூழல் அதிகாரி மகேஷ் கட்டாரி ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.



10. மதுரையில் காந்தி அரை ஆடை ஏற்ற தினமான செப் 22-ஆம்  தேதி நேற்று  நூறாவது ஆண்டு  அனுசரிக்கப்படவுள்ள நிலையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டசார்யா, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது காந்தியின் கொள்ளு பேரனான வித்தூர் பரதன் உடனிருந்தார்.