தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் நந்தவனபட்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்து தலையை மட்டும் எடுத்துச் சென்ற கொலையாளிகள் பசுபதி பாண்டியன் வீட்டில் வைத்து விட்டுச்சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. போலீஸ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதிபாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், புறா மாடசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டி, நிர்மலா உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.




இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் புறா மாடசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 பேர் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு சம்பவங்களில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வசித்த பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்து உதவியதாக நந்தவனப்பட்டி நிர்மலா (60) ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார் .இந்த வழக்கு விசாரணை வாய்தா 18.10.2021 அன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் வருகிறது .



இந்த நிலையில் நிர்மலா இன்று திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஈபி கலனி ரோடு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு பணிகளை பிரித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் நிர்மலாவை பயங்கர ஆயுதங்கள் கொண்டு வெட்டிக்கொலை செய்து தலையை மட்டும் துண்டித்து சென்றனர். பின்னர் கொலையாளிகள் வெட்டப்பட்ட தலையை பசுபதிபாண்டியன் நந்தவனப்பட்டியில் கொலை செய்யப்பட்ட அவரது வீட்டில் அவரது பிளக்ஸ் பேனர் அருகே வைத்து விட்டு சென்று விட்டனர் .


இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


திண்டுக்கல் மாவட்டத்தில் , தொடர்ந்து கொலை , கொள்ளை , கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .


’’கடந்த 5 நாட்களில் திண்டுக்கல்லில் 3 கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளதால் பரபரப்பு’’