உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தேதி முதல் ஜூன் மாதம் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்தில் இரண்டு நாள் நீதிமன்றம் செயல்படும் இதற்கான தனி நீதிபதிகளையும் பதிவாளர் அறிவித்துள்ளார். ந்நிலையில் மதுரை கிளை கூடுதல் பதிவாளர் பூரண ஜெய ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 5 வழக்கறிஞர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று தலைமை நீதிபதி அறிவுரைபடி கோடைகால விடுமுறை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கற நீதிமன்றங்களில் அங்கி அணிய தேவையில்லை. அதே நேரத்தில் அவர்கள் கருப்பு கோட்டுடன் கூடிய கழுத்து பட்டை கட்டாயம் அணிந்து ஆஜராகி கொள்ளலாம் என்ற கூடுதல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.x`
மகாபலிபுரத்தில் மத்திய மறைமுக வரி மற்றும் கலால் வரித்துறை சார்பில் நடக்க உள்ள மாநாட்டிற்கு தடை கோரிய வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி
மதுரையைச் சேர்ந்த ஜோஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் ஜி.எஸ்.டி. வருடாந்திர மாநாடு என்ற பெயரில் 2 நாட்கள் நிகழ்ச்சிக்கு அறைகள் மற்றும் அரங்கு முன்பதிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த அந்த மாநாடு வருகிற 5, 6ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மாநாட்டிற்காக தனியார் ஓட்டல் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த தொகை முழுவதும் மக்களின் வரிப்பணம் ஆகும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த டெல்லியில் அரசு சார்பில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.எனவே இந்த மாநாட்டினை அரசு கட்டிடங்களில் நடத்த வேண்டும் என்று உடனடியாக மத்திய நிதித்துறை, வருவாய்த்துறை செயலாளர்களுக்கு புகார் மனு அனுப்பினேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் மகாபலிபுரத்தில் மத்திய மறைமுக வரி மற்றும் கலால் வரித்துறை சார்பில் நடக்க உள்ள மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கை பொதுநலன் சார்ந்த வழக்கு என கூற முடியாது. இதுபோன்ற வழக்குகள் மத்திய-மாநிலத்திற்கு இடையே பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்த தொகையை வரைவோலையாக எடுத்து, அத்துடன் மன்னிப்பு கடிதத்தையும் சேர்த்து மத்திய நிதித்துறை செயலாளருக்கு 4 வாரத்தில் அனுப்ப வேண்டும். இதுகுறித்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.