திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் சேவை மையங்கள் மற்றும் குழந்தை உதவி மேசை அலுவலகங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்கள் என மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளன. திண்டுக்கல்லைச் சேர்ந்த தகுதியான பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் குழந்தைகள் சேவை மையங்கள் மற்றும் குழந்தை உதவி மேசை செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் குழந்தைகள் நலன், பாதுகாப்பு, அவசர உதவி போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த உதவி மையங்களில் ஏழு காலி பணிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகம் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்தில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
காலிப்பணியிட விவரம்: மேற்பார்வையாளர் (Supervisor). மொத்த காலியிடங்கள்: 4 (திண்டுக்கல் ரயில் நிலையம் - 3, பழனி பேருந்து நிலையம் - 1)
மாத ஊதியமாக ரூ.21,000 வழங்கப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், சமூகப் பணி (Social Work), கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூக சமூகவியல், சமூகவியல் (Sociology) ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வழக்கு பணியாளர் (Case Worker): மொத்த காலியிடங்கள்: 3, மாதம் ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு 42 ஆகும்.
இந்த வேலைகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்., சம்பளம், பொறுப்புகள், பணியின் தன்மை அனைத்தும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சேவை செயல்பாடுகளுக்கானவையாக இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,பிளசிங்ஸ், பிளாட் எண்.4,2-ஆவது குறுக்குத் தெரு (மாடி),எஸ்பிஆர் நகர்,மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்), திண்டுக்கல் - 624004,தொலைபேசி: 0451-2904070
விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள், வயது ஆதாரம் மற்றும் முகவரி ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.11.2025 முழு விவரங்களும் www.dindigul.nic.in என்ற இணையதளத்தை காணலாம்..