தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள வெள்ளகெவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர் வருகின்றது.


Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி


இந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பக்கரை அருவிக்கு வந்து சென்றனர். அருவியில் வரும் குறைந்த அளவில் இருந்த நீரில் ஒவ்வொரு நபராக குளித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தனர்.


Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி


Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?


சென்ற சில நாட்கள் வரையில் அருவியில் குறைந்த அளவில் கொட்டி வந்த நீரில் ஆண்கள் அதிக அளவில் நின்று கொண்டு பல மணி நேரமாக குளிக்கும் நிலையால் பெண்கள் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கும்பக்கரை அருவியில் துர்நாற்றம் வீசும் நிலையும் ஏற்பட்டது. இந்த சூழல் இருக்க தற்போது பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு 12 மணி வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நள்ளிரவு முதல்  நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  மேலும் அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.