மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். சுற்றுலா தலமான கொடைக்கானல் நகர் பகுதியில் பிரதானமாக இருக்கக்கூடிய நிலையில் கொடைக்கானலில் சுற்றியும் ஏராளமான மலை கிராமங்கள் இருந்து வருகின்றன. கொடைக்கானலில் இருந்து மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியை கடந்து, எட்டு மணி நேர நடை பயணத்தை கடந்த பின்னர் பார்க்கும் கிராமம் தான் மஞ்சம்பட்டி என்ற கிராமம்.




இதுவே கொடைக்கானல் தாலுகாவின் கடைசி கிராமமாக உள்ளது. மஞ்சம்பட்டியில் இருந்து 2 மணி நேரம் நடந்தால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தழிஞ்சி என்ற கிராமம் உள்ளது . இந்த தழிஞ்சி என்ற கிராமம் பழங்குடியின கிராமமாக இருந்து வருகிறது . 21 ஆம் அறிவியல் நூற்றாண்டில் பல்வேறு கண்டுபிடிப்புகள் இருந்தாலும் பலதரப்பு மக்களிடம் உலகமே கைக்குள் அடங்கும் கைபேசி வைத்திருந்தாலும் இன்னும் இயற்கை மாறாமல் பழமை வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இந்த தழிஞ்சி மக்கள்.




விண்ணை முட்டும் உயரம் கொண்ட கட்டிடங்கள் நகரம் மற்றும் மாநகரங்களில் உயர்ந்து வந்தாலும் இங்கு இருக்கக்கூடிய வீடுகளோ கலைவை மண்ணில் மூங்கில் வைத்து கட்டப்பட்டு இருக்கிறது. நகரங்களில் வாழக்கூடிய மக்கள் பல்வேறு துறைகளில் அசத்தி வந்தாலும் இக்கிராமம் கால்நடைகளை வைத்தும் விவசாயத்தை மெய்ப்படவும் செய்து வருகின்றனர். நூறு குடும்பங்களுக்கு மேலாக வாழக்கூடிய இந்த மக்கள் தற்போது வரை அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தான் இருந்து வருகின்றனர் .


Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி




அருகில் இருக்கக்கூடிய உடுமலைப்பேட்டைக்கு செல்வதற்கு கூட இரண்டு மணி நேரம் நடை பயணமாக சென்று தான் செல்ல வேண்டும். அங்கு தான் இவர்களுக்கான ரேஷன் பொருட்கள் கூட கிடைக்கப்பெறுகின்றன . 90களுக்கு முந்தைய காலத்தில் கிராமத்தில் ஒரே டிவி மட்டும் வைத்து கிராமமே பார்க்கும் அதே போன்ற நிகழ்வு தான் மின்சாரம் கூட இல்லாத இந்த தழிஞ்சி கிராமத்தில் தற்போது நடைமுறையாக உள்ளது. சோலார்களை வைத்து பேட்டரிகள் மூலம் மின்சாரம் சேமிக்கப்பட்டு ஒரு டிவிக்கு அரை கட்டி அந்த அறையை பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர் இந்த தழிஞ்சி மக்கள்.


”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?


காலையில் பரபரப்பாக விவசாய வேலைகளுக்கு சென்று மாலை கிராமத்திற்கு வந்து சேரும் கிராம மக்கள் அனைவரும் தரையில் ஒன்றாக அமர்ந்து ஒரே டிவியை பார்ப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 90 களுக்கு முந்தைய காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கையை தற்போது தான் வாழவே துவங்கி உள்ளனர். அறிவியலின் உச்சம், கைபேசிகளில் உரையாடல், செயற்கையான வாழ்க்கை முறை, உள்ளிட்டவைகளுக்கு நாம் மாறினாலும் இன்னும் தற்சார்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இந்த பழங்குடியின கிராம மக்கள்.