திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மன்னவனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா, பாலமுருகன் ஆகிய இருவரும் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை அந்த இளம் பெண் தனது வாகனத்தில் மாலை நேரத்தில் கொடைக்கானல் சென்று விட்டு மீண்டும் கூக்காலில் உள்ள தனது தோட்டத்திற்கு வந்துள்ளார்.


IT Raid BBC: பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை.. நடப்பது என்ன?




அப்பொழுது ஜீவா மற்றும் பாலமுருகன் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் மது அருந்திவிட்டு அந்த இளம் பெண்ணின் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளம் பெண் பூம்பாறை பகுதியினை கடந்ததை கண்காணித்த இருவரும் இளம் பெண் ஓட்டிச் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து கூக்கால் பிரிவு அருகே இளம் பெண்ணின் வாகனத்தை மறைத்து இரண்டு இளைஞர்களும் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.


CM Stalin: "என் வழி.. தனி வழி.." ஆக்கப்பூர்வ அரசியல்தான் எங்கள் பாணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் சத்தம் போட்டு உள்ளார்.  இளம் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்து அந்த இரண்டு இளைஞர்களையும் பிடிக்க முன்றுள்ளனர். ஆனால் பாலமுருகன் மட்டும் பொது மக்களிடம் சிக்கி உள்ளார். ஜீவா என்ற இளைஞர் தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து இளம்பெண் கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஜீவாவையும், பாலமுருகனையும் கைது செய்த பின்னர் குற்றவாளிகள் இருவரையும் கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.


சென்னையில் 9 கிலோ நகைகள் கொள்ளை; குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏன்? - காவல் ஆணையர் பதில்


இந்த வழக்கை விசாரித்த கொடைக்கானல் நீதி அரசர் கே. கார்த்திக் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஜீவா மற்றும் பாலமுருகன் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதித்தும், இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், இருபதாயிரம் ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.


 



நீதிபதி கே.கார்த்திக்


 


பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க தண்டனை கடுமையாக இருக்கும் பட்சத்தில் குற்றங்கள் குறையும் என்ற நோக்கத்துடன் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கொடைக்கானல் காவல்துறையினர் செயல்பாட்டை பாராட்டியும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண