திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60-வது மலர்க்கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று துவங்கியது.  விழாவை தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். உடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .




தொடர்ந்து  சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் பாண்டா கரடி, வாத்து, ஒட்டகச்சிவிங்கி ஆகிய உருவங்கள் பல லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை, வரிக்குதிரை, டோரா புஜ்ஜி பொம்மை ஆகிய உருவங்கள் காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் காமராஜர், கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது உருவங்கள் காய்கறிகளில் செதுக்கப்பட்டுள்ளது. இவை சுற்றுலா பகுதிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பூங்கா முழுவதும் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து கோடை விழா நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது.




தமிழ்நாடு  சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடைக்கானல் அறுபதாவது மலர்  கண்காட்சி விழாவில் பேசி உரையாற்றினார். அப்போது கொடைக்கானல் மலைப்பகுதிக்கு சிறப்பு என்றால் அது குறிஞ்சி மலர் தான். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்பாடு செய்ய திட்ட வரைவு தயார் செய்துள்ளதாக தகவல். சுற்றுலா பெருந்திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி தமிழகத்தில் 32 இடங்களை தேர்வு செய்து, சுற்றுலா தலங்களை மேம்பாடு செய்யப்படும் என தகவல். கொடைக்கானல் மன்னவனூர் புல்வெளி பகுதியில் சாகச சுற்றுலா விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என தகவல்.கடந்த ஒரு ஆண்டில் 55 லட்சம் எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தகவல்.




கொடைக்கானலில் ஓராண்டில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய மாற்றுச்சாலை திட்டங்கள் ஏற்படுத்தப்படும். கொடைக்கானல் என்றும் மலைகளின் இளவரசியாக இளமையுடன் திகழும். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கூடுதலாக விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும் உணவு மற்றும் குடிமை பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி மலர் கண்காட்சியில்  பேசினார்.




தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கொடைக்கானல் மலர் கண்காட்சியில் பேசுகயில், "தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டம் அதிகம் காய்கறி உற்பத்தி செய்யும் மாவட்டமாக உள்ளது. அடுத்த ஆண்டு கொடைக்கானல் ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சி நடத்தப்படும். கொடைக்கானல் மலைப்பகுதியில் சீசன் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மாற்றுச்சாலை அமைக்கப்பட  மாவட்ட அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களும், சுற்றுலாத்துறை அமைச்சர் நிகழ்ச்சியை ராமச்சந்திரன் அவர்களும்,  நடவடிக்கை எடுக்க வேண்டும்.புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு பயிரிடும் பரப்பை 200 ஹெக்டேர் அளவிற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண