Kodaikanal: விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகளால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

வனத்துறையினர் காட்டு யானைகளை தற்காலிகமாக விரட்டுவதும், மறுநாளே மீண்டும் விவசாயப் பகுதிகளுக்குள் வருவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது,

Continues below advertisement

கொடைக்கானல் பள்ளங்கி, கோம்பை விவசாயத் தோட்டங்களுக்குள் முகாமிட்டு சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம், நிரந்தரமாக அடர்ந்த  வனப்பகுதிக்குள்  விரட்ட வனத்துறையினரிடம் கையெடுத்து கும்பிட்டு மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

Watch Video: துர்க்கை அம்மனுக்கு நடத்தப்படும் அக்னி கேளி சடங்கு.. அப்படி என்ன விஷேசம்?


விளைநிலத்தில் காட்டு யானைகள்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  மலைக்கிராமங்களான பேத்துபாறை, அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர்,மங்களம்கொம்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் குட்டியுடன்  தொடர்ந்து முகாமிட்டு விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றது, மேலும் வனத்துறையினர் காட்டு யானைகளை தற்காலிகமாக விரட்டுவதும், மறுநாளே மீண்டும் விவசாயப் பகுதிகளுக்குள் வருவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது,

Vegetable Price: சண்டே சமையல்.. காய்கறி விலை பட்டியல்.. விலை உயர்ந்த புடலங்காய், குடைமிளகாய்..


பயிர்கள் சேதம்:

இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் 4-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் இப்பகுதியில் உள்ள மயிலம்மா என்ற மூதாட்டியின் விவசாய தோட்டப்பகுதியில்  முகாமிட்டு அங்கு 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் பயிர்களையும்,பலா மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது, இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர்,

Madurai: மதுரையில் காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்.. டிபன்பாக்ஸ் குண்டு வீச்சு - போலீசார் விசாரணை


மேலும் சேதமடைந்த பீன்ஸ் பயிர்களுக்கு உரிய இழப்பீடு துரிதமாக வழங்கவும்,  வனத்துறையினர் விரைவில் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மயிலம்மா மூதாட்டி கையெடுத்து கும்பிட்டு  கோரிக்கை விடுத்துள்ளார், மேலும் முதியவர்கள் வசிக்கும் இப்பகுதியில் பெரும் அசாம்பவிதம் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola