கொடைக்கானலில் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் கூட்டணி நெரிசலை கட்டுப்படுத்தவும், கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், கடந்த மே 7 ஆம் தேதி இ.பாஸ் நடைமுறை திட்டம் அமல்படுத்தி ஜூன் 30 முடிவடைந்த நிலையில் மீண்டும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் இ-பாஸ் திட்டம் நிறைவு பெறுகிறது. இதுவரை இபாஸ் பெற்ற வாகனங்கள் 291561 என்றும் இதுவரை வாகனங்கள் 109636 வாகனங்கள் மட்டுமே இபாஸ் பெற்று வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள் சென்ற சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரதான சுற்றுலா இடங்களுக்கு சென்று ரசிப்பதுடன் தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்து காணப்படும் .
இந்த சூழலில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் வேளையில் வத்தலகுண்டு பிரதான சாலை, ஏரி சாலை, அப்சர்வேட்டரி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஆனது ஏற்பட்டு வந்தது. இதனால் கொடைக்கானல் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெறும் இடையூறுக்கு ஆளாகினர். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கெடுப்பதற்காகவும் கடந்த மே 7 ஆம் முதல் ஜூலை 30-ம் தேதி வரை இ_பாஸ் முறையானது அமல்படுத்தப்பட்டது .
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் தணிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 30 ஆம் தேதி பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின் படி இ பாஸ் முறையானது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சியை அருகே உள்ள சோதனை சாவடியில் அதிகாரிகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சோதனை இட்டு இபாஸ் எடுத்திருந்த வாகனங்களை மட்டுமே நகர் பகுதிக்குள் அனுமதித்தனர். தொடர்ந்து கொடைக்கானல் நகருக்குள் வருவதற்கு 2,91,561 வாகனங்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 109636 வாகனங்கள் மட்டுமே நகர் பகுதிக்குள் வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இன்றுடன் இ பாஸ் முறை முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் இ-பாஸ் முறை நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இருந்து வருகின்றனர்