கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐயப்பன் கோயிலில் தொடங்கியுள்ள சபரிமலை சீசனில் மண்டல பூஜைக்காக பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வருகை தருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கலால் துறையினர், மாசு கட்டுப்பாடு வாரியம் உட்பட மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து பல்வேறு சோதனைகளை செய்து வருகின்றனர்.




குறிப்பாக போதை பொருள் கடத்தல் தொடர்பாகவும் போதை பொருள் விற்பனை தொடர்பான சோதனையில் கலால் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் போல் சிலர் போதை பொருள் கடத்துவதும் அதேபோல் புகையிலை விற்பனை செய்து வருவதும் தொடர்ந்து வருவதால் இந்த சோதனையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?


சபரிமலையில் கலால் துறையினர் சோதனை பலமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 2ம் தேதி வரை 197 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 1055 வழக்குகளில் ரூ.2.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலால் வரி உதவி ஆணையர் எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார். மதுவிலக்கு மண்டலங்களான நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் காவல்துறை, மோட்டார் வாகனத் துறை, சுகாதாரத் துறை மற்றும் கலால் துறையினர் 17 முறை இணைந்து சோதனை நடத்தினர். சன்னிதானத்தில் 65 தடவைகள் சோதனை நடத்தப்பட்டது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தியதற்காக 439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?


பம்பையில் கலால் துறையினர் 92 சோதனை நடத்தி 370 வழக்குகளை பதிவு செய்தனர். நிலக்கல்லில் 57 ஆய்வுகள் நடத்தப்பட்டன. 246 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் சிஐஜி ராஜீவ், நிலக்கல் சிஐஜி பென்னி ஜார்ஜ், பம்பை சிஐ என்கே ஷாஜி ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது. சோதனையுடன், கடைகள் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடம் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வும் நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்க நடவடிக்கை நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் என மூன்று கலால் வரம்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் 24, நிலக்கல்லில் 30, பம்பையில் 20 என 20 கலால் அலுவலர்கள் பணிபுரிகின்றனர். மதுவிலக்கு மண்டலமாக உள்ள சபரிமலையில் போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் வரி உதவி ஆணையர் எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.