Adimali Kumily NH: அடிமாலி To குமுளி... விரைவில் தொடங்கும் பணி..சுற்றுலா பயணிகளே இங்க போக இனி ஈஸி..!
Adimali Kumily National Highway: அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை இடுக்கி மாவட்டத்தின் உயிர்நாடியாக மாறும் என்று கூறப்படுகிறது.
கேரள மாநிலம் என்றாலே மலைகள் நிறைந்த இயற்கை அழகு நம்மை வரவேற்கும். அங்கிருக்கும் கால சூழல், உணவு பழக்க வழக்கங்கள் உட்பட கேரளாவிற்கென தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும் தமிழகத்திற்கு அருகில் குறிப்பாக தேனி மாவட்டத்திலிருந்து செல்லக்கூடிய குமுளி, தேக்கடி , மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர் பல்வேறு தரப்பினர் சென்று வருகின்றனர். அப்படி வந்து, செல்லும் பொழுது ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்கும் கேரளாவில் உள்ள மூணாறு முதல் தேக்கடி வரையில் உள்ள முக்கிய மலைவழிச்சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது. இதனை தவிர்க்கவும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வேலைகளை கேரள சுற்றுலா துறையினரும் இடுக்கி மாவட்டமும் தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் ஏற்கனவே திடமிடப்பட்ட 77 கி.மீ நீளமுள்ள அடிமாலி முதல் குமுளி வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை (NH 185)க்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை (NH) பிரிவு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பாதையில் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட திட்டமிடல் அரசிதழ் அறிவிப்பை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
தேசிய நெடுஞ்சாலை உதவி நிர்வாகப் பொறியாளர் ரெக்ஸ் பெலிக்ஸ் அவர் கூறுகையில், இங்கு நெடுஞ்சாலை 30 மீட்டர் அகலப்படுத்தப்படும் என்று கூறினார். நெடுஞ்சாலைக்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 1,000 கோடி எனவும், நிலம் கையகப்படுத்துதலுக்காக மத்திய அரசு ஏற்கனவே 484 கோடியை ஒதுக்கியுள்ளது என்று பெலிக்ஸ் கூறினார். இதுகுறித்து மேல் அதிகாரிகள் கூறுகையில், மொத்தம் 280 ஹெக்டேர் பரப்பளவில் 1,494 தனியார் மற்றும் அரசு சொத்துக்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்திற்காக தேவிகுளம், உடும்பன்சோலா மற்றும் இடுக்கி தாலுகாக்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்படும் என்று அதிகாரி கூறினார்.
புதிய நெடுஞ்சாலை சீரமைப்பு, இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸின் கூற்றுப்படி, அடிமாலியிலிருந்து குமுளி வரையிலான தூரத்தை 77 கி.மீ ஆகக் குறைக்கும். இந்த நெடுஞ்சாலை மாவட்டத்தின் மையப் பகுதியைக் கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இரண்டு பாதைகள் கொண்டிருக்கும். ஆரம்பத் திட்டம் NH-ஐ 18 மீட்டராக விரிவுபடுத்துவதாக இருந்தது, ஆனால் அது பின்னர் திருத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தல் விரைவில் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியான குரியகோஸ் கூறினார்.
இடுக்கி மாவட்டத்தின் உயிர்நாடி
மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைப் பணிகள் முடிந்ததும், பயணிகள் தேக்கடியை எளிதாக அடைய முடியும். இந்த நெடுஞ்சாலை இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். மூணாரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் புதிய நெடுஞ்சாலை வழியாக இடுக்கி அணை மற்றும் தேக்கடியையும் அடையலாம் என்று தேசிய நெடுஞ்சாலை வட்டாரங்களில் கூறுகின்றனர். மேலும் புதிய நெடுஞ்சாலை இடுக்கியில் உள்ள வெள்ளரம்குன்னு, ஆனவிலசம், பனம்குட்டி, கீரித்தோடு, செலச்சுவடு, கரிம்பன், தடியம்பாடு மற்றும் அடிமாலி போன்ற கிராமங்களை இணைக்கும். இந்த நெடுஞ்சாலை இடுக்கி மாவட்டத்தின் உயிர்நாடியாக மாறும் என்று கூறப்படுகிறது.