கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணை கமிசன் அமைத்துள்ளேன், தீர்ப்பு வரும் போது பார்த்துக் கொள்வோம் என சொன்ன ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். முதல்வரின் நல்ல எண்ணம் அவரது உழைப்பு மக்களுக்கு தெரியும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் - என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர் சந்திப்பு
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மகாலில், உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி - யின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கூலி தொழிலாளர்கள் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,
 
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான்
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்...,” கரூர் துயர சம்பவம் நடந்த அன்றே இரவோடு இரவாக மருத்துவமனைக்கு வந்து அனைத்து மக்களுக்கும் நன்மையை செய்தவர் முதல்வர் ஸ்டாலின். இன்று அருமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை செய்து வருகிறீர்கள். தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம். விசாரணை கமிசன் அமைத்துள்ளேன் தீர்ப்பு வரும் போது பார்த்துக் கொள்வோம்., என சொன்னவர் யாரென்றால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். அவரது நல்ல எண்ணம் அவரது உழைப்பு மக்களுக்கு தெரியும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என பேட்டியளித்தார்.
 
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்த கேள்விக்கு நழுவிச் சென்றார்.,