கரூர் கூட்டத்தில் 41 உயிரிழந்ததற்கு யார் காரணம்? கருர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும் - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பழனியில் குற்றச்சாட்டு!
நயினார் நாகேந்திரன் கூட்டத்தில் பேசும் பொழுது, ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் தேசிய ஜனநாயக கட்சியினுடைய ஆட்சி வந்துவிடும் கூட்டணி குறித்து ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் அனைத்தும் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் விசிக விற்கும் திமுகவுக்கும் விரிசல் உள்ளது எனவும்,காங்கிரஸ் அந்த கூட்டணி தொடருமா என்று தெரியவில்லை என பேசினார்.ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை எதுவும் செய்யவில்லை. அவரது மகனை துணை முதல்வர் ஆக்கியுள்ளார். ஆட்சி மாற்றம் வந்தபின் அனைத்துக்கும் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும் என பேசினார். கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல்வர் தருகிறார். சாதாரணமாக இறக்கு மக்களுக்கு 2 லட்சம் தான் தரப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் கரூர் கூட்டத்தில் 41 உயிரிழந்ததற்கு யார் காரணம்?கருர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும். என குற்றம் சாட்டினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் தெரிவித்ததாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரை சொல்கிறாரோ அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்ன டிடிவி தினகரன் தற்போது மாற்றி பேசுகிறார். என்றால், நீங்கள் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறினார். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் 13ம் தேதி தீர்ப்பு வழங்குவது குறித்து கேட்ட போது,முதலில் தீர்ப்பு வரட்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக அணிகளைடைய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.