திருவிழக்காலங்கள் மற்றும் கோவில் விசேச நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அது மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் ஆரம்பத்திலிருந்தே சபரி மலை சீசன் ஆரம்பாகும். இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். அப்போது பூக்கள் விலை பலமடங்கு அதிகரிக்கும். அதன்படி பல்வேறு பகுதிகளில் பூக்கள் விலை அதிகரிக்கும் உயரும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூக்கள் விலை தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000 வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் தற்போது மார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. அதன்படி இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆனது.
அதேபோல் ரூ.1,200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்து 500-க்கும், ரூ.800 முதல் ரூ.950-க்கு விற்ற ஜாதிப்பூ, ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை நாட்களுக்கு முன்னதாக வெளியூர் வியாபாரிகள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு வந்து அனைத்து வகையான பூக்களையும் வாங்கி செல்வது வழக்கம். அதன்படி திருச்சி, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூ வியாபாரிகள் திண்டுக்கல்லுக்கு வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
Hindu Values: ”இந்து மத விழுமியங்களால்தான் உலகில் அமைதி மேம்படும்” - தாய்லாந்து பிரதமர் பேச்சு
மேலும் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்தும் குறைவாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் இன்று பூக்களின் விலை உயர்ந்தது என்கின்றனர் விவசாயிகள். மார்க்கெட்டில் ரோஜா ரூ.180, செவ்வந்தி ரூ.150, அரளி ரூ.400, சம்பங்கி ரூ.130, செண்டுமல்லி, கோழிக்கொண்டை தலா ரூ.70, வாடாமல்லி ரூ.50-க்கு நேற்று விற்பனை ஆனது.
திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் 2வது முறையாக அமலாக்கத்துறை சோதனை
அதே போல் தேனி மாவட்டத்திலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் குறிப்பாக இன்று சனிக்கிழமை ஐயப்பனுக்கு விரத நாள் என்பதால் காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட்டில் மக்கள் குவிந்து வந்தனர். ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பூக்களின் விளைச்சல் சற்று பாதிப்பு அடைந்ததாகவும், இதனால் பூக்கள் வரத்து சற்று குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000-க்கு விற்கப்பட்டது. அதேபோல் பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம் ஆகிய பூக்களும் கிலோ ரூ.2,000-க்கு விற்பனை ஆனது. வரத்து குறைந்ததால் ஆண்டிப்பட்டி பகுதியில் மல்லிகைப்பூவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.