பட்ஜெட் ஏமாற்றம் தான் - வரி விதிப்பில் தெளிவு இருக்காது -2026 சட்ட மன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் தெரிய வரும் என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்பி. பேட்டியளித்தார்.

 

கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர் சந்திப்பு

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி BSNL தலைமை அலுவலகத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பி.எஸ்.என்.எல்., தொலைத் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்ட கார்த்தி ப சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஏமாற்றம் தான். வரி விதிப்பில் தெளிவு இருக்காது. இந்திய பொருளாதாரத்தை வழி நடத்த திறமை இல்லை என்பதை பா.ஜ.க., அரசு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

 


 

ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு

 

தமிழகத்தில் முதல்வராக வருவதற்கு ஜாதி பாகுபாடு என்பது கிடையாது. தேர்தலில் பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி தலைவர் தான் முதல்வராக முடியும். ஆசிரியர்கள் போராட்டம் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். தொலை தொடர்பு துறையில் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தாத ஆல் BSNL நிறுவனம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே BSNL நிறுவனத்தால் போட்டி போட முடியும். தற்போது 5-ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

 

சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்கள் பேசுகிறாரே என்ற கேள்விக்கு

 

சீமான் ஆக்கப்பூர்வமான விஷயங்களை பேசுவதில்லை. மாறாக பொருத்தமற்ற வகையில் அவர் தொடர்ந்து பேசுவதை நான் கவனிப்பது இல்லை. 2026 சட்ட மன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் தெரிய வரும் என்று கூறினார்


 


 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...