கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நிதிச்சுமை காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது.


Vinayagar Idol Immersion: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு




இந்த நிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால் இத்திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மகளிருக்கான 1000 ருபாய் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.


விநாயகர் சதுர்த்தி எதிரொலி - ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை




பல்வேறு மாவட்டங்களில் துவங்கப்பட்டு நடந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு ஆயிரம் ரூாபாய் வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் காண காசோலையில் வழங்கி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூறும்போது: எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டத்தை இந்த மாநிலத்தில் முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். மகளிருக்கு உரிமை தொகை அளித்த ஒரே முதலமைச்சர் முக ஸ்டாலின் தான். குடும்ப தலைவர் கூட செய்ய முடியாத காரியத்தை தமிழக முதலமைச்சர் செய்து இருக்கிறார்.


தமிழகத்தின் சார்பாக இரு மாநில ஆளுநராக இருக்கும் எனக்கு உரிமை இல்லா விட்டால், வேறு யாருக்கு உரிமை உள்ளது - தமிழிசை கேள்வி




பெண்களுக்கு திருமணம் ஆகும் போதும் என்ன மகிழ்ச்சி இருக்கிறதோ குழந்தை பெறுகின்ற போது என்ன மகிழ்ச்சி இருக்கின்றதோ அதை விட ஒரே நாளில் கோடான கோடி பெண்கள் ஒரே நாளில் மகிழ்ச்சி அடைய செய்கின்ற பெருமை முதலமைச்சரையே  சேரும் குடும்ப தலைவர் கூட செய்ய முடியாத காரியத்தை தமிழக முதலமைச்சர் செய்து இருக்கிறார். இவ்வாறு பேசினார். பின்னர் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர் ஆயிரம் ரூபாய் காண காசோலையை வழங்கினார் இதில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளது பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.