Jallikattu 2025 Date and Place: போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு இணையதளம் மூலம் பதிவு நடைபெற்று நிறைவுபெற்றது. இதில் மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5 ஆயிரத்து 786 காளை உரிமையாளர்களும் 1698 மாடுபிடி வீரர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4820 காளை உரிமையாளர்களும் 1914 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளை உரிமையாளர்களும் 1735 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர்.
இதே போல் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து காணலாம்.
- மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது
- பாலமேடு ஜல்லிக்கட்டு 15-ம் தேதி நடைபெறுகிறது
- உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது.
- 16-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நெய்காரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
- அதே 16-ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
- புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியும் 16-ம் தேதி தான் நடைபெறுகிறது.
- 18-ம் தேதி புதுக்கோட்டை மண்டையூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
- 18-ம் தேதி திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
- 18-ம் தேதி நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஜல்லிக்கட்டு அன்று தான் நடைபெறுகிறது.
- 18-ம் தேதி புதுக்கோட்டை மண்டையூரிலும் நடைபெறுகிறது. 19-ம் தேதி அன்று திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை ஜல்லிக்கட்டில் இத்தனை பேருக்குதான் டோக்கன் ; வெளியானது லிஸ்ட்