மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் அடுத்த வீரபாண்டியில் கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்தாண்டு நடைபெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  கலப்பின மாடுகளுக்கு டோக்கன் கொடுக்க மாட்டோம். தி.மு.க ஆட்சியில் ஜல்லிகட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது. நாட்டு மாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தமிழ்நாட்டில் முன்பு இருந்த நாட்டு மாடு வகைகள் என்னென்ன?

  1. அத்தக்கருப்பன்
  2. அழுக்குமறையன்
  3. அணறிகாலன்
  4. ஆளைவெறிச்சான்
  5. ஆனைச்சொறியன்
  6. கட்டைக்காளை
  7. கருமறையான்
  8. கட்டைக்காரி
  9. கட்டுக்கொம்பன்
  10. கட்டைவால் கூளை
  11. கருமறைக்காளை
  12. கண்ணன் மயிலை
  13. கத்திக்கொம்பன்
  14. கள்ளக்காடன்
  15. கள்ளக்காளை
  16. கட்டைக்கொம்பன்
  17. கருங்கூழை
  18. கழற்வாய்வெறியன்
  19. கழற்சிக்கண்ணன்
  20. கருப்பன்
  21. காரிக்காளை
  22. காற்சிலம்பன்
  23. காராம்பசு
  24. குட்டைசெவியன்
  25. குண்டுக்கண்ணன்
  26. குட்டைநரம்பன்
  27. குத்துக்குளம்பன்
  28. குட்டை செவியன்
  29. குள்ளச்சிவப்பன்
  30. கூழைவாலன்
  31. கூடுகொம்பன்
  32. கூழைசிவலை
  33. கொட்டைப்பாக்கன்
  34. கொண்டைத்தலையன்
  35. ஏரிச்சுழியன்
  36. ஏறுவாலன்
  37. நாரைக்கழுத்தன்
  38. நெட்டைக்கொம்பன்
  39. நெட்டைக்காலன்
  40. படப்பு பிடுங்கி 
  41. படலைக் கொம்பன்
  42. பட்டிக்காளை 
  43. பனங்காய் மயிலை
  44. பசுங்கழுத்தான் 
  45. பால்வெள்ளை
  46. பொட்டைக்கண்ணன்
  47. பொங்குவாயன்
  48. போருக்காளை
  49. மட்டைக் கொலம்பன்
  50. மஞ்சள் வாலன் 
  51. மறைச்சிவலை, 
  52. மஞ்சலி வாலன்
  53. மஞ்ச மயிலை
  54. மயிலை
  55. மேகவண்ணன்
  56. முறிகொம்பன் 
  57. முட்டிக்காலன்
  58. முரிகாளை
  59. சங்குவண்ணன்
  60. செம்மறைக்காளை
  61. செவலை எருது
  62. செம்மறையன்
  63. செந்தாழைவயிரன்
  64. சொறியன்
  65. தளப்பன்
  66. தல்லயன் காளை
  67. தறிகொம்பன் 
  68. துடைசேர்கூழை
  69. தூங்கச்செழியன்
  70. வட்டப்புல்லை
  71. வட்டச்செவியன்
  72. வளைக்கொம்பன்
  73. வள்ளிக் கொம்பன்
  74. வர்ணக்காளை
  75. வட்டக்கரியன்
  76. வெள்ளைக்காளை
  77. வெள்ளைக்குடும்பன்
  78. வெள்ளைக்கண்ணன்
  79. வெள்ளைப்போரான்
  80. மயிலைக்காளை
  81. வெள்ளை
  82. கழுத்திகாபிள்ளை
  83. கருக்காமயிலை
  84. பணங்காரி
  85. சந்தனப்பிள்ளை
  86. சர்ச்சி
  87. சிந்துமாடு
  88. செம்பூத்துக்காரி
  89. செவலமாடு
  90. நாட்டு மாடு
  91. எருமை மாடு
  92. காரி மாடு

இவ்வாறு தமிழ்நாட்டில் 92 நாட்டு மாடு வகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள்தான் அனுமதிக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி தகவல் !