தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது வைகை அணை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை 5 முறை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 9 மாதங்களாக 69 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வை திரும்ப பெறுக.. தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்சொத்து வரி உயர்வை திரும்ப பெறுக.. தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதுவும் அணையில் போதுமான நீர்இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர்இருப்பு இல்லாத நேரத்தில் வைகை ஆற்றில் பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை நிரப்பி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடத்தப்படும்.
மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,035 கன அடியில் இருந்து 2,048 அடியாக அதிகரிப்பு
இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா, பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரையில் வருகிற 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதையொட்டி வைகை அணையில் இருந்து வருகிற 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 6 நாட்கள் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வைகை அணையில் போதுமான நீர்இருப்பு உள்ளதால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மொத்தம் 250 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்படும். மேலும் தண்ணீர் திறப்பு குறித்து அரசின் அனுமதி கேட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் அளிக்கலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்