கோயிலில் நகைகள் தேய்மானத்திற்கு நகைகளை கையாண்ட பணியாளர்கள் ரூ.7,49,964 செலுத்த கோரி ராமநாதஸ்வாமி தேவஸ்தான செயல் அலுவலகத்தின் நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலில் கைங்கர்யம் குருக்களாக பணியாற்றுகிறேன். கோயிலில் உள்ள சாமியின் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது, நகைகளின் எடை அளவு குறைந்துள்ளதாகவும், இதற்குரிய தொகையான ரூ.7,49,964 ஐ நகைகளை கையாண்ட பணியாளர்கள் நவம்பர் 30க்குள் செலுத்துமாறு ராமநாதஸ்வாமி தேவஸ்தான செயல் அலுவலர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

 

புராதன தங்க நகைகள், வெள்ளி கவசங்கள், மற்றும் பூஜை பொருட்கள் தினசரி பூஜை மற்றும் திருவிழா காலங்களில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு அதிகாரிகளின் மேற்பார்வையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது. தினசரி மற்றும் திருவிழா கால பயன்பாட்டால் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. இதை கருத்தில் கொண்டு நகைகள் தேய்மானத்திற்குரிய பணத்தை எங்களிடம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இதேபோல் மேலும் பலர் மனு செய்திருநதனர்.

 

இந்த மனு நீதிபதி முகம்மது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, செயல் அலுவலரின் நோட்டீசிற்கு இடைகால தடை விதித்து விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

 



மற்றொரு வழக்கு














 

தன்னை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கிய உத்தரவை  ரத்து செய்யக்கோரி காவலர் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலர், தமிழ்நாடு டிஜிபி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

 

மதுரையைச் சேர்ந்த முதல் நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் " மதுரை ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தேன் கடந்த 2021 ஆம் ஆண்டு காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் எனக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க கோரி மனு அளித்திருந்தேன் ஆனால் ஈடு செய்யும் விடுப்பை வழங்க மாவட்ட காவல் ஆணையரின் ஒப்புதலை பெற வேண்டும் எனக் கூறி சாதாரண விடுப்பினையை வழங்கினார் .

 

இது எனக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியது ஆகவே இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை வீடியோ ஒன்றினை வெளியிட்டேன். அதனை தனியார் சமூக வலைதளங்களில் வைரலானது இதனைத் தொடர்ந்து, என் மீது துறை ரீதியான  நடவடிக்கையாக பணி நீக்கம் செய்யப்பட்டேன் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை என்பது நடைபெற்று வந்த நிலையில் எனது தரப்பு கருத்துக்களை கேட்காமலேயே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு என்னை பணிநீக்கம் செய்து விட்டனர் இது ஏற்கத்தக்கதல்ல. ஆயுதப்படை காவல் துணை ஆணையர் சோமசுந்தரம்,  டிக்-டாக் வீடியோக்களை  சமூக ஊடகங்களில் போலீஸ் சீருடையிலும். அறை  நிர்வாண  வீடியோவை பதிவேற்றினார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் எச்சரித்து அதிகாரிகளால் மன்னிக்கப்பட்டது. இதுபோல் பல காவலர்கள் தங்களது மன அழுத்தத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் அதில் சில காவலர்களை தமிழ்நாடு காவல்துறை தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஆனால் நான் முதல்வருக்கு கோரிக்கை குறித்த வீடியோவை வெளியிட்டதாகவும் முக கவசம் அணியவில்லை என்று கூறி என்னை பணி நீக்கம் செய்துள்ளனர்.

 

தன் மீதான தவறை மறைப்பதற்காக காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் , அவரை நான் தகுதியற்ற காவல் ஆய்வாளர் என திட்டியதாக பொய்யான புகாரளித்துள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஜனவரி 12ஆம் தேதி மதுரை ஆயுதப்படையில் இணை ஆணையர் என்னை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் மீண்டும் முதல் நிலை காவலராக பணியில் அமர்த்த அமர்த்தவும் பலன்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக உள்துறை செயலர் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.