சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளும் என நம்புகிறோம். அண்மையில் புதிதாக ஆளுநர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது தமிழக ஆளுநர் புது டெல்லி சென்று வந்த பிறகு இது போன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசுவதில்லை தமிழ்நாடு அரசிடம் ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது எனக்கு" என்றார்.



 

ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஆதரவளிப்பதாக ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு.

அ.தி.மு.க.,வில் நிகழ்கிற உக்கட்சி பூசல் பா.ஜ.க.,விற்கு சாதகமாக இருக்கிறது போட்டி போட்டுக் கொண்டு பா.ஜ.கவை சுமப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது அ.தி.மு.கவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லதல்ல என்பதை அ.தி.மு.க., தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈரோட்டில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது அவர்கள் வெற்றி பெற விடுதலை சிறுத்தை கட்சியினர் முழுமையாக பாடுபடுவோம் என கூறினார்.



 

திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பெரும்பான்மையான வாக்குறுதி நிறைவேற்றாமல் உள்ளதே 

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது, நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை இருக்கிறது. நிறைவேற்ற வேண்டும் என்ன நான் வலியுறுத்துகிறோம்.



ஜாதி வாரிய கணக்கெடுப்பு வட மாநிலங்களில் கூட இந்த குரல் அதிக அளவு ஒலிக்கிறது. பீகாரில் அண்மையில் இதற்கான அரசாணை வெளியிட்டு அதற்கான வேலை நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டுக்கும் அது தேவை தமிழக அரசு அதனை பரிசீலனை செய்யும் என நம்புகிறேன். என தெரிவித்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் வி.சி.க., கட்சியின் நிர்வாகி நவநீதகிருஷ்ணன்- சண்முகப்பிரியா தம்பதியினரின் 7 மாத ஆண் குழந்தைக்கு அறிவமுதன் என பெயர் சூட்டினார்.