77th Independence Day: நாட்டின் 77வது சுதந்திர தினக் கொண்டாட்ட விழா வெகு விமரிசையாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் மக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



 

மேலும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அண்டை நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றிவைக்க செங்கோட்டைக்கு வந்தடைந்த பின் நாட்டின் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி. அதே போல் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.




 


 

இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதராமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 46-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ரயில் பயணிகள் கேக் வெட்டியும், ரயில் ஓட்டுனர்களுக்கு  மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.



 

கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை மற்றும் மதுரைக்குச் செல்லும் பகல் நேர விரைவு ரயிலாக உள்ள இந்த ரயில் தென் மாவட்ட வணிகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்ல் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு.

 




 

நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

 

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,”வைகை எக்ஸ்பிரஸ்ன் 46-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ரயில் பயணம் இனிமையானது. அதனை அனைவரும் நினைவாக கொண்டு சிலாகிக்க முடியும்” என நெகிழ்ச்சியாக பேசினர்.