இன்று 30.10.2023-ம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழா நடைபெற உடள்ளதை முன்னிட்டு, மதுரை மாநகரில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் வருகையொட்டி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலை உள்ளிட்ட மாநகர் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதித்து என மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
அதே போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இன்று 30.10.2023-ம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழா நடைபெற உடள்ளதை முன்னிட்டு, மதுரை மாநகரில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
30.10.2022 ம் தேதியான இன்று லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.
நத்தம் ரோடு, அழகர் கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் திரும்பி மாற்று பாதையாக ராஜா முத்தையா மன்றம், K.K.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, PTR பாலம், காமராஜர் சாலை வழியாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜா முத்தையா மன்றம், தாமரைதொட்டி சந்திப்பு வழியாக புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும். மேலும் மாட்டுத்தாவணியிலிருந்து நகருக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் K.K.நகர், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை சந்திப்பு: கணேஷ்தியேட்டர் சந்திப்பு காமராஜர் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சாலை வழியாக நகருக்குள் செல்ல வடக்கு வெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள். பாலம் ஸ்டேசன் ரோடு, M.M லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, E2 E2 சாலை. அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலமடை பகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பு. குருவிக்காரன் சாலை சந்திப்பு. கணேஷ்தியேட்டர் சந்திப்பு காமராஜர் கேட்டுக்கொள்ளப்படுகிறது.. சாலை. வழியாக நகருக்குள் செல்ல தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள் நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோரிப்பாளையம் தேவர்சிலை சந்திப்பிற்கு செல்ல எந்த ஒரு இருசக்கர வாகனத்திற்கும் அனுமதி இல்லை. இவ்விழாவிற்கு வரக்கூடிய இரு சக்கரவாகனங்கள் அனைத்தும் தமுக்கம் மைதானம், அண்ணா பேருந்து நிலையம் மற்றும் எம்.எம். லாட்ஜ் சந்திப்பு மேலக்கார தெரு ஆகிய இடங்களில் நிறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, 30.10.2023-ந் தேதி தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, வியாபார பெருமக்கள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களின் நலன் கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்று ஏற்பாடுகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.