தமிழக -கேரள எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது, கடந்த ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் முதல் அலையிலிருந்து ஒப்பிடும்போது இரண்டாம் அலையில் தேனி மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. முழு பொதுமுடக்கத்தின்போது தினசரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 400 நபர்களில் இருந்து 500 நபர்கள் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தளர்வுகள் கூடிய ஊரடங்கு நாட்களில் தினசரி 100க்கும் கீழ் நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
இன்று மட்டும் 47நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42274 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 84 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41309-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 491 ஆக இருக்கிறது. இன்று 474 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் . இன்று 3 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் இன்று வரையில் 216135 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ்177413 பேருக்கும் இரண்டாவது டோஸ் 36129 பேருக்கும் போடப்பட்டுள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை.
அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 37 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31561-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 33நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30666-ஆக அதிகரித்துள்ளது. இன்று 5 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 588 இருக்கிறது. தற்போது 307 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரையில் 216135 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 184648 பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் 184648 பேருக்கு போடப்பட்டுள்ளது. இன்று மட்டும் 3962 பேருக்கு தடுப்பூசிகள் போட்டுள்ளனர். அதே போல் பழனி சுகாதார மாவட்டத்தில் 157470 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 132341 பேருக்கும் இரண்டாவது டோஸ் 25129 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இன்று 3380 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.