தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகளில்  உள்ளாட்சித் தேர்தலை நடத்த பணிகள் மும்முரமாக மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில்

   தேனி(அல்லிநகரம்), சின்னமனூர் ,கம்பம் ,கூடலூர், பெரியகுளம் ஆகிய நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு இட ஒதுக்கீடு மறுசீரமைப்பு செய்து அறிவிப்பு வெளியான நிலையில் அதன்படி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் உள்ள வார்டுகளில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 8,9 ஆகிய வார்டுகளும் ,ஆதிதிராவிடர் பெண்களுக்கு 3,7, 11 ஆகிய வார்டுகளும், பெண்கள் பொது பிரிவிற்கு 2,5,10,13,15,17,18,21,22,23,24,25,28,29 ஆகிய வார்டுகளும், பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.




போடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொதுவிற்கு 15-வது வார்டு , ஆதிதிராவிடர் பெண்களுக்கு 18, 27  ஆகிய வார்டுகளும், பெண்கள் பொது பிரிவிற்கு 3,4,5,6,8,11,13,16,17,22,24,25,28,32,33 ஆகிய வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு இதர வார்த்தைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 




சின்னமனூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 5 ,10 ஆகிய வார்டுகளும் ஆதிதிராவிடர் பெண்களுக்கு 4 ,8 , 16 ஆகிய வார்டுகளும் பெண்கள் பொது பிரிவுருக்கு  6,9,11,12,13,14,15,17,20,22,23 ஆகிய வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 33வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 9, 13 ஆகிய வார்டுகளும் பெண்கள் பொது பிரிவிற்கு 8,12,14,17,18,19,20,21,22,23,24,25,28,29,30 ஆகிய வார்டுகளும், பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஆதிதிராவிடர் பொதுப்பிரிவிற்கு 15வது வார்டு, பெண்கள் பொதுப்பிரிவிற்கு 5,6,9,10,11,12,13,14,17,20ஆகிய வார்டுகளும், பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் ஆதிதிராவிட பொது பிரிவிற்கு 13, 15 ஆகிய வார்டுகளும் , ஆதிதிராவிடர் பெண்களுக்கு 11, 14 ,30 ஆகிய வார்டுகளும், பெண்கள் பொது பிரிவிற்கு 1,6,8,9,10,12,16,18,19,21,25,29 ஆகிய வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்