1. திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லக்கூடிய அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் திண்டுக்கல்லில் இருந்து துவங்கியது.
2. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வாரசந்தையில் இரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே வியாபாரிகளுக்கு பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர் என பேருராட்சி செயல் அலுவலர் பால்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
3. தூத்துக்குடி மடத்தூர் சிப்காட் பகுதியில் உள்ள குடோனில் இருந்து
25 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் ஒருவரைக் கைது செய்து விசாரணை.
4. ராமநாதபுரம் அருகே ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
5. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
6. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேதி மாற்றப்பட்டுள்ளது - மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
7. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஜன.17ம் தேதி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமைக்கு மஞ்சு விரட்டு போட்டியை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி அறிவிப்பு செய்துள்ளார்.
8. தனியார் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதி பெற்று சட்ட விரோதமாக அரசு நிலத்தில் கிராவல் மண் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
9. தமிழ்நாடு முழுமைக்கும் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
10. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக தமிழக அரசு ஜனவரி 10-ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசு ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!