1. இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்களில் 9 பேர் மட்டும் சொந்த ஊர் வந்தனர். 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் அவர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

2. உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழிலுக்கான  ஜி.எஸ்.டி வரியை அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தென்மாவட்ட உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

3. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 அடி நீள மலைப்பாம்பு நாயை விழுங்கிய நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.

 

4. மீண்டும் மஞ்சள் பை இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கிய நிலையில் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மஞ்சள் பை வடிவிலான பரோட்டோவை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர்



 

5. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில்  இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.

 

6. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு ஊசிபோடும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 



 

7. நெல்லையில் கழிவுநீர் பிரச்னை குறித்த பொதுமக்களின் புகாருக்கு செவி சாய்க்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாக்கடை திருவிழா என்ற பெயரில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பரபரப்பு.

 

8. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியானை தொடர்ந்து பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

 



 

9. தேனி மாவட்டம் பெரியகுளம் மார்க்கெட்டில் நடந்த சோதனையில் 200 கிலோ ரசாயனம் தடவிய மீன்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரை மொத்த வியாபாரிகள் மீது, சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


 



10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  330 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77024-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 36  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74558-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1189 இருக்கிறது. இந்நிலையில் 1277 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.