1. பேஸ்புக்கில் "துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்"நகைச்சுவையாக கருத்து பதிவிட்டவரை காவலில் வைக்க மறுத்த வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
2. கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தொடர்ந்த வழக்கை இறுதி தீர்ப்பிற்காக டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
3. தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை மைய வளாகத்தில் 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட எலும்பு வங்கியை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று தொடங்கி வைத்தார்.
4. வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 2-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை - ஜனவரி 7ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு.
6. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் தென் கடல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மூன்றாம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்கின்றனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், அதேபோல மண்டபம் தென் கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 250 படகுகளும் ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நேரடியாக தொழில் செய்யக்கூடிய 7500 மீனவர்களும் சார்பு தொழிலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் வருவாய் மட்டும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், தங்கச்சிமடம் வலசை தெருவில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டு இன்று உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது.
7. தூத்துக்குடி ராஜாவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது.
8. கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு நேற்று 2ஆவது நாளாக மாணவர்கள் பள்ளியை புறக்கணித்தனர்.
9. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,979 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
10. தேனி மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு நிலம் - RDO-வின் டிஜிட்டல் கையப்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலமானது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!