1. மதுரை நகரில் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் திரண்டதால், கடை வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

 

2. மதுரையில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் ஆய்வு மேற்கொண்டார். உர இருப்பு மற்றும் விலை பட்டியல், கொள்முதல் பட்டியல் மற்றும் விற்பனை ரசீது ஆய்வு செய்யப்பட்டது.

 

3.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேல் ஆகிறது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

4. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்க டூவீலர்களில் வந்து ரகளையில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 41 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

 

5. விருதுநகர் மாவட்ட பட்டாசு கடைகளில் வருவாய் துறையினர் ஆய்வு செய்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 1424 சரவெடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தனர்.

 

6.விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி ஸ்டேஷன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமியின் மேட்டுப்பட்டி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.

 

7. தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் மூடப்பட்ட நூலகங்கள் விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் சிவகங்கையில் தெரிவித்தார்.

 

8. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் இன்று நவம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கல் புனித நீராட அனுமதி அளித்துள்ளது.

 

9.தூத்துக்குடி மாவட்டம் கீழ விளாத்திகுளத்தினை சேர்ந்த இராணுவ வீரர் ரவிக்குமார் என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் அவருக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. ரவிகுமாருக்கு நேற்றுடன் பணிநிறைவு பெறும் நிலையில் கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

10.  தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வந்தாலும் சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என, கொட்டும் மழையிலும் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.