1. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு பேருந்து புறப்படும் நேரத்தில் தனியார் பேருந்தை இயக்குவதைக் கண்டித்த போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளரைத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
2. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தொல்லியல் ஆய்வு நடைபெறும் கீழடிக்கு அக்டோபர் 29 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
3. தேனி மாவட்டம் வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமத்கள் 2.90 லட்சம் மதிப்பிலான 7 ஐம்பொன் சிலை திருட்டு போனது. திருடர்கள் விட்டுச் சென்ற 7 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
4. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ.வை கட்டிப் போட்டு 4 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.
5. 8.99கோடி வணிக வரி ஏமாற்றம் செய்த தொழிலதிபருக்கு முன் ஜாமீன் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
6. மருதுபாண்டிய சகோதரர்களின் வாரிசுகள் இணைந்து மருதுபாண்டியர்கள் பிறந்த ஊரான விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குளம் என்ற ஊரில் குருபூஜை நடத்த அனுமதி கோரி வழக்குகில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
7. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 15 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75143 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73763-ஆக அதிகரித்துள்ளது.
8. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையம் 31ஆவது கட்ட விசாரணை நிறைவு இதுவரை 979 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டு 1223 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட விசாரணை நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. 32 ஆம் கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் பேட்டி அளித்துள்ளார்.
9. தூத்துக்குடி துறைமுக உரங்கிடங்கிற்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து கப்பல் மூலம் வந்தடைந்த பொட்டாஸ் உரங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
10. மதுரையில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதை குடும்பத்தினர் கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.